உடல் ஆரோக்கியத்திற்கு சில ஹெல்த் டிப்ஸ் :-

1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.

2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.

3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்

4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம்.

5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)

7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.

8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.

9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.

10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.
|

சச்சின் ஒரு சகாப்தம்

இது ஒரு மீள்பதிவு. இன்று (24.04) சச்சினின் பிறந்த நாளாதலால் அவரின் சாதனைகள் சிலவற்றை இந்த பதிவில் திரும்பிப்பார்க்கலாம்.முந்தைய பதிவு இங்கே.சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

24 ஏப்ரல் 1973 ல் பிறந்த வலக்கை ஆட்டக்காரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் பள்ளிப்பருவங்களிலே சச்சினின் குரு மற்றும் ஆரம்பகால பயிற்சியாளர் "ரமாக்கந்த் அச்ரேக்கர்" அவரின் கீழ் கிரிக்கெட் வாழ்வைத் துவக்கினார். எம்.ஆர்.எஃப் அகடமியில் ஆஸ்திரேலியர் "திரு.டென்னிஸ் லில்லி"யின் கீழ் வேகப் பந்துவீச்சாளராக பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.அங்கு அவர் மட்டை வீச்சில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக லில்லியால் குறை கூறப்பட்டார்.

பள்ளிப்பருவத்திலே அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை விக்கெட் மீது வைத்து விடுவாராம்,சச்சினின் விக்கெட்டை எடுப்பவர்களுக்கு அந்த நாணயம் வழங்கப்படும் என்று பந்தயம் வைத்திருக்கிறார்.இல்லையென்றால் அந்த நாணயம் சச்சினுக்கு சொந்தம். அப்படியாக 13 நாணயங்களை பெற்ற சச்சின் இன்றும் கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.
1988 களில் சச்சினின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.1988 ல் அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சதமடித்தார்.அந்த வருடத்தில் தான் 2006 ஆம் வருடம் வரை தகர்க்கப்படாமலிருந்த உலகத்திலே ஒரு விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ரன்னான 664* ஐ வினோத் காம்ளியுடன் சச்சின் எடுத்தார், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற லார்ட் ஹாரிஸ் பட்டயத்திற்கான போட்டி அது. 326 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

14 வயதுடன் தனது முதல் தரக் கிரிக்கெட்டை சச்சின் தொடங்கிய போது திரு.சுனில்கவாஸ்கர் அவர்கள் இரண்டு மென்மையான கால் கவசத்தை (Pad)அளித்திருக்கிறார்.அது தான் நான் நன்றாக விளையாட தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வரலாற்றில் அதிக சதமாகிய கவாஸ்கரின் 34 சதத்தை முறியடித்த போது கூறி கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.

1988 டிசம்பர் 11ல் 15 வயது 232 நாட்களாகிய சச்சின் தனது முதல் தர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே மும்பைக்காக குஜராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதமடித்து மிக இள வயதிலேயே சதமடித்தவர் என்ற புகழைப் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தான் ஆடிய மூன்று(ரஞ்சி, துலீப், இரானி) அறிமுகப் போட்டிகளிலும் சதமடித்த பெருமையையும் பெற்றுள்ளார்.என்றாலும் சச்சினின் சர்வதேச அறிமுக ஆட்டங்களிலும் ஆரம்ப காலங்களிலும் சொல்லும்படியான பங்களிப்பு இல்லை.16 வயதில் 15 நவம்பர்,1989 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக,கிரிஸ் ஷ்ரீக்காந்த் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.முதல் இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார்.ஆனாலும் பாகிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சை சமாளித்ததே மிகப் பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுனர்கள் இன்றும் கூறுகின்றனர்.ஏனென்றால் வக்கார் வீசிய ஒரு பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது;அதன் பின்னரும் இரத்தக் கறைபடிந்த சட்டையுடன் சச்சின் தொடர்ந்து ஆடியது தான்.
அதே ஆண்டு டிசம்பர் 18 ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது கால் தடம் பதித்தார்.முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அறிமுக ஆட்டங்களில் சச்சினின் விக்கெட்டைச் சாய்த்தவர் வக்கார் யூனிஸ்.வக்காருக்கும் அது அறிமுக ஆட்டங்கள் தான் என்பது சுவாரஸ்யம்.
17 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சச்சின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் எடுத்தார்.அதன் பின்னர் தனக்கு 25 வயது ஆகுமுன் 16 சதங்கள் அடித்தார்.2000 ல் உலக கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களுக்கு மேல்(டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இணைந்து) எடுத்த முதல் வீரர் என்ற புகழைப் பெற்றார்.
1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் குவித்த 148 ஓட்டங்கள் மற்றும் பெர்த் வாக்கா மைதானத்தில் அடித்த சதமும் தான் இன்று வரை அவரடித்த சதங்களில் முதலிடம் பெறுகிறது.ஏனென்றால் பெர்த் மைதான ஆடுதளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிக சாதகமானது.

அன்றே ஆஸ்திரேலியாவின் மெர்வ் ஹூஜ்ஸ் ஆலன் பார்டரிடம் இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான் என்று கூறியிருக்கிறார்.

உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர். டான் பிராட்மேனே சச்சினின் ஆட்டம் அவரது ஆட்டத்தைப் போன்றே இருப்பதாக சச்சினைப் புகழ்ந்திருக்கிறார். பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.

1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.

1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற "கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்" தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.அந்த தோல்விக்காக இன்றும் வருத்தப்படுகிறார் சச்சின்.
1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.கிரிக்கெட் மீது அத்தனை ஈடுபாடு உள்ளவர் தான் சச்சின்.

2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணகர்த்தாவானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
2005, டிசம்பர் 10 அன்று திரு.கவாஸ்கரின் 34 டெஸ்ட் சதங்களை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.

2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.

2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12773 (ஏப்ரல் 7, 2009 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 42சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.

ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 16684 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (மார்ச் 8, 2009 ன் படி). அதிகபட்ச ஓட்டம் 186*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது சற்றே விசித்திரம் தான்.


23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் எடுப்பதிலும் சதமடித்துள்ளார்,ஒரு நாள் போட்டிகளில் 129, டெஸ்ட் போட்டிகளில் 102.மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.

இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.இந்திய பாராளுமன்றம் வரை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது(வேற பிரச்சினைகளே நாட்டில் இல்லையென்பதால்?!)

2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து சச்சினின் இரட்டை சதத்திற்கு வேட்டு வைத்தார்.அது இன்றும் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுத்துவதாக சச்சினே கூறியுள்ளார்.

2006ல் தோள்பட்டை பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.போட்டிகளில் பங்கேற்காமலிருந்த அந்த சில மாதங்கள் "கபில் தேவ், அந்நாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்".அந்த நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று வருத்தப்படுகிறார்

சச்சின் இப்போது.விருதுகள்

1994 அர்ஜூனா விருது
1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது
1999-பத்மஸ்ரீ விருது
2008-பத்மவிபூஷன் விருதுசச்சினின் ஆட்டத்தில் எனக்கு பிடித்தது
-அவரின் அற்புதமான Straight drive (சுனில் கவாஸ்கரே வியக்கிறார் சச்சினின் Straight drive ற்கு), Cover drive மற்றும் Leg flick.-1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.-2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.-2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.-2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும்,அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்க்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
(ஆனாலும் 20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து 20-20 ஆட்டங்களிலிருந்து விலகியிருந்த சச்சினும் ஐ.பி.எல் ல் ஆட என்ன என்பது தான் புரியவில்லை. 20-20 ஆட்டங்களில் அவரது இரட்டை நிலையும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை)

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நன்மையா? தீமையா?

பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்
  • இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்படமாட்டாது.
  • 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும்.
  • கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
  • பனாமா கால்வாய் போல குறும பார்வைத் தொலைவு 2.5 கி.மீ.
    33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.

வரலாறு


  • 1860- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது.
  • 1861 - டௌன்செண்டு (Townsend) அவர்களின் முன்மொழிவு.
  • 1863 - மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் (Sir William Denison) அவர்களின் முன்மொழிவு
  • 1871 - ஸ்டோடார்ட் (Stoddart) அவர்களின் முன்மொழிவு
  • 1872 - துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் (Robertson) அவர்களின் முன்மொழிவு
  • 1884 - சர் ஜான் (Sir John) அவர்களின் தென்னிந்திய கப்பல் கால்வாய்த் துறைமுகம் மற்றும் கரி ஏற்று-இறக்குமதி நிலையக் கும்பினி (South India Ship Canal Port and Coaling Station Ltd) என்பதற்கான முன்மொழிவு
  • 1903 - தென்னிந்திய தொடர்வண்டிப் (இரயில்வே) பொறியியலாளர்கள் முன்மொழிவு (S.I. Railway Engineer's proposal)
  • 1922- துறைமுகப் பொறியாளராக இருந்த சர். ராபர்ட் ப்ரிஸ்ட்டோ திட்டத்தைப் பரிந்துரை செய்கிறார்.
  • 1955- ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார் தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு" 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.
  • 1983- இந்திரா காந்தி நியமித்த லெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது.
  • ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள் மன்மோகன் சிங் அவர்களால் மதுரையில் துவக்கி வைக்கப் படுகிறது.

திட்டத்திற்குச் சார்பான கருத்துக்கள்

பொருளியல் வளர்ச்சி தொடர்பான காரணங்கள்


  • இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும்.
  • கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைய வாய்ப்பு.
  • கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலாவணி சேமிப்பு.
  • கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு.
  • கப்பல்கள் அதிகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி துறைமுகமும், தமிழகத்தின் தென்மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.
  • இராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும்.

படைத்துறை - இடம்சார் அரசியல் நலன் குறித்த காரணங்கள்

  • இந்தியக் கடற்படையின் போர்க்கலன்களை கிழக்குக் கரையோரப்பகுதிகளுக்கும் மேற்குக்கரையோரப்பகுதிகளுக்குமிடையில் அவசரகாலத்தில் மிக வேகமாக பாதுகாப்பாக நகர்த்த உதவும்.
  • கருங்கடலிலிருந்து சிங்கப்பூர் துறைமுகம் வழியாகச்செல்லும் மிகமுக்கிய கடல் வணிகப்பாதையின் பாதுகாப்புச் சார்ந்த முக்கியத்துவத்தை இந்தியக் கடற்படை பெற்றுக்கொள்ளும்.
  • இந்தியாவிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு இலங்கையை நோக்கி பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதை இலகுவாக இந்தியக்கடற்படையினால் கண்காணித்து முறியடிக்க முடியும். (விடுதலைப்புலிகளின் கண்ணோட்டத்தில் இது இத்திட்டத்தின் பாதகமான விளைவாகும்)
  • இலங்கை, மாலைதீவு, மியான்மார் போன்ற நாடுகளில் சீனாவோ அல்லது இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு எதிரான சக்தியொன்றோ தன் கடற்படைச்செல்வாக்கை அதிகரிக்கும்போது இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது நாட்டின் கடற்படைப் வலுவைக் காப்பாற்ற முடியும்.


திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள்

  • சுற்றுச்சூழல் நிலைப்பட்ட காரணங்கள்
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.
  • அரியவகை கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம். மன்னார் வளைகுடா 10,500 சதுர கிலோமீட்டர் பரப்புக் கொண்டது. அது 3,600 வகையான கடற்செடிகொடிகள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவளப்பாறை வகையறாக்களை உள்ளடக்கியது.
  • இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 வகையான மீன்கள் இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாகும்.
  • 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை தீவிர பாதிப்புக்கு ஆளாகும் என அஞ்சப்படுகிறது.
  • ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடிய தீநேர்வு வாய்ப்புள்ளது (ஆபத்து).
  • மீனினங்கள் இடம் பெயரும் அபாயம்.
  • யாழ்ப்பாணத்தின், கால்வாய்க்கு அண்மையிலுள்ள நிலப்பகுகளில் நிலத்தடி நீர்வளமும் நிலக்கட்டுமானமும் குலையக்கூடிய தீநிகழ்தகவு உள்ளது (அபாயம்).
  • யாழ்ப்பாணத்தையும் இராமேசுவரத்தையும் அண்டியுள்ள சிறு தீவுகள் நீரில் மூழ்கக்கூடிய தீநேர்வு வாய்ப்பு (அபாயம்).


பொருளியல் நிலைப்பட்ட காரணங்கள்

  • மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம்.
    தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
    ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளியல் கோணத்தில் எதிர்ப்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம்.
  • இலங்கையின் கொழும்புத் துறைமுகம் பாதிக்கப்படும் என்பதால் இலங்கை அரசு பெரும் கவலை கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தால் பெரிய பொருளியல் நன்மைகள் எதுவும் விளையப்போவதில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் செலவுகளோடு ஒப்பிடும் போது கிடைக்கும் நன்மைகளும் இலாபமும் மிகக் குறைவு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
  • கப்பல்கள் பயண நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்ற கருத்து மீதான வலுவான சந்தேகங்கள். (பனாமா, சூயஸ் போன்ற உலகின் ஏனைய கால்வாய்களின் அனுபவத்திலிருந்து) கால்வாய் வழியாக குறைவான வேகத்திலேயே கப்பல்கள் செல்ல முடியும்.
    கால்வாய்க்குள் நுழைவதற்கு கட்டணம் அறிவிக்கப்படும்.
  • கால்வாய் ஊடான பயணத்திற்கு வழியனுமதி பெற சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி வரும்.
  • கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச்செல்வதற்கு சிறப்புக் கால்வாய் மாலுமிகளை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
  • மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் தாமதம் இலங்கையைச்சுற்றி வர எடுக்கும் தாமதத்தை அண்மிக்கின்றது.
  • இயற்கை வளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாதாரண, அடித்தட்டு மக்களின் சொத்தாக இருக்கும். அதையே பெரு நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளுக்கான பெரிய திட்டங்களூடே அழிக்க முற்படும்போது மிகக்குறைந்த விழுக்காட்டினரான பணக்கார வர்க்கத்துக்கே முழுமையாகப் பயன்படும் என்கிற வாதம்.


இடம்சார் அரசியல் நிலைப்பட்ட காரணங்கள்

  • பனாமா கால்வாய் வெட்டப்பட்டதன் பின்னான அமெரிக்க அரசியல் தலையீடுகள் போன்ற ஏகாதிபத்திய நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
  • இந்தியாவின் அரசியல் நலன் என்று இத்திட்டத்தில் இனங்காணப்படுபவை அண்டை நாடான இலங்கையின் அரசியல் நலன்களுக்கு முரணாக இருத்தல்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு சாதகமானதாக இத்திட்டம் அமைகிறதென்றும் பாதகமாக அமைகிறதென்றும் இருவேறுபட்ட எதிரெதிர் கருத்துக்கள்.
  • இந்திய இடம்சார் அரசியல், படைத்துறைச் செல்வாக்கினை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக கருதப்படுவதால் இந்திய நலன்கள் தமக்கெதிரானவையாக இருக்கும் என்று அஞ்சுகின்ற ஏனைய பிரிவினருக்கும் நாடுகளுக்கும் இத்திட்டம் கெடுதியாக (பாதமாக) அமையக்கூடும்.


சமய நிலைப்பட்ட காரணங்கள்

  • ஆதாம் பாலம்/இராமர் பாலம் என அழைக்கப்படும் மன்னாருக்கும் இராமேசுவரத்துக்கு இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதி, இராமாயணம் எனும் இந்து சமய இதிகாசம் ஒன்றோடு சம்பந்தப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. திட்டத்தில் இத்திட்டுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்க்கின்றன.


உலகம் முழுக்க 'இலவசமாக எஸ்.எம்.எஸ்' அனுப்ப வேண்டுமா..?

மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துவதில் நமது செல்போன் சேவை கம்பெனிகள் ரொம்பவும் புத்திசாலிகள், ஒரு கம்பெனி தான் அப்படி என்று நாம் நினைத்து வேறொரு கம்பெனியின் சேவைக்கு மாறினாலும் அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இது போன்ற தருணங்களில் நாம் மாற்று வழியை கையாள வேண்டும். உதாரணமாக நாம் எஸ்.எம்.எஸ் க்கு ஏன்? காசு கொடுத்து அனுப்ப வேண்டும், அதே சேவையை பல இணையதளங்கள் நமக்கு இலவசமாக தருகின்றன. அவைகளை பயன்படுத்தினால் நாம் நமது போன் கட்டணங்களை முடிந்த அளவு குறைத்துவிடலாம் . இங்கே இலவச 'எஸ்.எம்.எஸ் சேவைகளை' வழங்கும் இணையதளங்களின் 'லிங்க்குகளை' இணைத்துள்ளேன், பயன்படுத்திப்பாருங்களேன் ...
1. www.atrochatro.com
2.www.160by2.com
3.www.way2sms.com
4.www.sendsmsnow.com
5.www.youmint.com
6.www.sms2friends.com
7.spicesms.com
8.www.freesmsfun.com
9.www.freesms.net
10.www.seasms.com
11.www.smsjunction.com
12.www.freesms.smsix.net
13.www.indiansms.net
14.www.freesms2world.com
15.www.freephonesms.com
16.www.freesmstous.com

PDF search engine

The following link used to search PDF format only
http://www.pdf-search-engine.com/